தொழில்நுட்பம்
லெனோவோவின் ரொடேட்டிங் ஸ்கிரீன் லேப்டாப்: ஐ.எப்.ஏ.வில் அறிமுகமாகிறது புதிய கான்செப்ட்!
லெனோவோவின் ரொடேட்டிங் ஸ்கிரீன் லேப்டாப்: ஐ.எப்.ஏ.வில் அறிமுகமாகிறது புதிய கான்செப்ட்!
நாம் பயன்படுத்தும் லேப்டாப்களின் வடிவம் எப்போதுமே ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால், லெனோவோ அதை மாற்றியமைக்க ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த செப்டம்பர் மாதம் பெர்லினில் நடைபெறும் IFA (Internationale Funk Ausstellung) தொழில்நுட்பக் கண்காட்சியில், லெனோவோவின் புதிய கண்டுபிடிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த உள்ளது. அதுதான், திரையை சுழற்றக்கூடிய லேப்டாப்.கான்செப்ட் லேப்டாப்: Project Pivoபிரபல டிப்ஸ்டர் எவன் பிளாஸ், ‘ப்ராஜெக்ட் பிவோ’ (Project Pivo) என்றழைக்கப்படும் இந்த புதிய லேப்டாப் பற்றிய தகவலை X தளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த லேப்டாப்பின் சிறப்பம்சம் என்னவென்றால், இதன் திரையை நாம் விரும்பியபடி landscape மற்றும் portrait என இரு திசைகளிலும் சுழற்ற முடியும். இதன் மூலம், இணையதளத்தில் செய்திகள் படிக்க, கோடிங் செய்ய அல்லது நீளமான பைல்களைப் பார்க்கும்போது திரையை செங்குத்தாக மாற்றிக்கொள்ளலாம். திரைப்படங்கள் பார்ப்பது, கேம் விளையாடுவது போன்ற வழக்கமான பயன்பாடுகளுக்குத் திரையை கிடைமட்டமாக வைத்துக் கொள்ளலாம்.இது வெறும் கான்செப்ட் மாடலா (அ) விற்பனைக்கு வருமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், லெனோவோ இது போன்ற புதுமையான பொருட்களை வர்த்தகக் கண்காட்சிகளில் காட்சிப்படுத்துவது வழக்கம். ஏற்கனவே, ரோலபிள் டிஸ்ப்ளே கொண்ட ThinkBook Plus Gen 6 போன்ற சாதனங்கள் கான்செப்டில் இருந்து நிஜ வாழ்க்கைக்கு வந்திருப்பதால், இந்த லேப்டாப்பும் சந்தைக்கு வர வாய்ப்புள்ளது.லெனோவோவின் மற்ற வெளியீடுகள்இந்நிகழ்வில், லெனோவோவின் புதிய கேமிங் கருவியான Legion Go 2-ம் அறிமுகமாக உள்ளது. இது Steam OS இயங்குதளத்துடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய IdeaPad Plus மற்றும் Yoga Tab டேப்லெட்டுகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. லெனோவோவின் துணை நிறுவனமான மோட்டோரோலாவும் இந்த கண்காட்சியில் கலந்துகொள்கிறது. Moto G06, Moto G06 Power மற்றும் Moto Edge 60 Neo ஆகிய 3 புதிய ஸ்மார்ட்போன்களை மோட்டோரோலா வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்ப உலகில் லெனோவோவின் இந்த புதிய நகர்வு, இனி லேப்டாப்புகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது.
