பொழுதுபோக்கு
15 வருஷம் முன்னாடி கமல் ஒன்னு சொன்னார்; அது இல்லாம இன்னைக்கு சினிமாவே இல்ல: லோகேஷ் கனகராஜ் உடைத்த உண்மை!
15 வருஷம் முன்னாடி கமல் ஒன்னு சொன்னார்; அது இல்லாம இன்னைக்கு சினிமாவே இல்ல: லோகேஷ் கனகராஜ் உடைத்த உண்மை!
சினிமா உலகில் தொழில்நுட்பத்தின் வருகை தவிர்க்க முடியாதது என்பதை காலம் பலமுறை நிரூபித்துள்ளது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று சினிமா எக்ஸ்பிரஸ் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் லோகேஷ் கனகராஜ் கமல் 15 வருடங்களுக்கு முன் கூறிய ஒன்று இப்போது சினிமாவில் முக்கிய பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார்.இயக்குநர் லோகேஷ் கனகராஜ், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்பம் சினிமா உலகில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிடி தளங்கள் அறிமுகமானபோது மக்கள் மத்தியில் இருந்த தயக்கம் மற்றும் அது குறித்த அறியாமை போன்ற நிலைமைதான் தற்போது ஏஐ விஷயத்திலும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.அப்போது உலகநாயகன் கமல்ஹாசன் தனது ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முயன்றபோது பல எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், இன்று ஒரு திரைப்படம் ஓடிடி தளம் இல்லாமல் முழுமை பெறாது என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த மாற்றத்தை அவர் சுட்டிக்காட்டி, ஏஐ தொழில்நுட்பமும் எதிர்காலத்தில் சினிமாவுக்கு மிகவும் அவசியமானதாக மாறும் என்பதை உணர்த்தினார்.மேலும், ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது, தன் விருப்பமான நடிகர் விக்ரம் என்று அவர் தெரிவித்தார். ஒருவேளை விக்ரமின் உருவம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டால், அதை திரையரங்கில் சென்று பார்ப்பீர்களா என்று கேட்டபோது, “விக்ரம் ஐயா அவர்களே நடித்தால் நான் முதல் நாள் முதல் காட்சியே போவேன்” என்று உறுதியளித்தார். இந்தக் கருத்துக்கள், தொழில்நுட்பம் எந்தளவுக்கு சினிமாவுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும், ரசிகர்கள் ஒரு நடிகரின் நடிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.கமல்ஹாசன் எப்போதும் தொழில்நுட்ப மாற்றங்களை முன்கூட்டியே உணர்ந்து செயல்படுபவர். அவரது ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட அவர் முயன்றபோது, சினிமா உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. “தியேட்டர் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்,சினிமாவின் பாரம்பரியம் அழிந்துவிடும்” போன்ற பல வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், கமல்ஹாசன் தனது தொலைநோக்குப் பார்வையிலிருந்து பின்வாங்கவில்லை. அன்று அவரது முயற்சிக்கு கிடைத்த எதிர்ப்பு, காலப்போக்கில் காணாமல் போனது. இன்று ஒரு திரைப்படம் ஓடிடி தளம் இல்லாமல் முழுமை பெறுவதில்லை என்ற நிலை உருவாகிவிட்டதாக லோகேஷ் கனகராஜ் கூறினார்.
