இலங்கை
400 ஆண்டுகளுக்கு சிறை செல்ல வேண்டிய மகிந்த – பொன்சேகா பகிரங்கம்!
400 ஆண்டுகளுக்கு சிறை செல்ல வேண்டிய மகிந்த – பொன்சேகா பகிரங்கம்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தபோது நிகழ்த்தியதாகக் கூறப்படும் பெரும் அளவிலான ஊழலுக்காக, அவருக்கு 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இலங்கையின் முன்னாள் தலைவர்கள் அனைவரும் நாட்டின் முன்னேற்றத்திற்கான தெளிவான கண்ணோட்டம் இன்றி செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், அவர்கள் சிங்கப்பூரின் லீ குவான் யூ, மலேசியாவின் மகாதீர் முகமது, ருவாண்டாவின் ஜெனரல் ஜூவெனல் ஹாபியரிமானா போன்ற சர்வதேச தலைவர்களுடன் ஒப்பிடுகையில் பெரும் பின்தங்கியவர்கள் எனவும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
2010 இல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசின் சீன பயணத்தின் போது, 65 பேரை உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அழைத்துச் சென்றதயும் அவர் அதன்போது நினைவூட்டியுள்ளார்.
