Connect with us

இந்தியா

அ.தி.மு.க உடைந்த கண்ணாடி; அதை ஒட்ட வைக்கும் எந்த முயற்சியும் எடுபடாது: புதுச்சேரியில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

Published

on

Puducherry CPI M K Balakrishnan talks about AIADMK Tamil News

Loading

அ.தி.மு.க உடைந்த கண்ணாடி; அதை ஒட்ட வைக்கும் எந்த முயற்சியும் எடுபடாது: புதுச்சேரியில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

அ.தி.மு.க என்பது உடைந்த கண்ணாடி அதை ஒட்ட வைக்கும் எந்த முயற்சியும் எடுபடாது. அ.தி.மு.க-வில் கொள்கை கோட்பாடு இல்லை. கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரித்துக் கொள்வதிலும், பாதுகாப்பதில் தான் இவர்கள் எண்ணம். தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக செங்கோட்டையன் இவ்வாறு பேசுகிறார் என்று சி.பி.எம்  அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும்  அரசு பள்ளிகளிலும் மாநில சமச்சீர் கல்வி திட்டத்திற்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும், சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கீழ் கல்வி என்ற ஒற்றை கல்வி முறையை  திணிக்காதே, தாய்வழி கல்விக்கு முன்னுரிமை வழங்க கோரி இந்திய மார்க்சிஸ்ட் கம்நூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி கல்வித்துறை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சுப்பையா சிலையில் இருந்து சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக வந்து கல்வித்துறையை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், “அ.தி.மு.க என்பது ஒரு உடைந்த கண்ணாடி. அந்த கண்ணாடியை ஒட்டவைக்க எடுக்கும் எந்த முயற்சியும் எடுபடாது என்றும், அவர்களுக்குள் கொள்கை கோட்பாடுகள் என்று ஏதுமில்லை என்றும் கொள்ளையடிக்கிற பணத்தை பாதுகாப்பது, பங்குபோட்டு கொள்வதில் தான் பிரிவு ஏற்பட்டுள்ளது. 10 அல்லது 15 நாளில் பிரிந்தவர்களை செங்கோட்டையன் எப்படி ஒருங்கிணைப்பார். தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்காக சொல்லும் வாய்ப்பு தான் என்றும், ஆனால் அதிமுக ஒன்றுபடுவதற்கான வாய்ப்பு நிச்சயம் இல்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது முடியாத காரியம், அவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை. அது காலம் கடந்துவிட்டது” என்று அவர் கூறியுள்ளார். செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன