Connect with us

உலகம்

பெயர் குழப்பம் காரணமாக மார்க் ஜுகர்பெர்க் மீது வழக்கு தொடர்ந்த மார்க் ஜுகர்பெர்க்

Published

on

Loading

பெயர் குழப்பம் காரணமாக மார்க் ஜுகர்பெர்க் மீது வழக்கு தொடர்ந்த மார்க் ஜுகர்பெர்க்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் மார்க் ஜுகர்பெர்க். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கறிஞர் மார்க் மெட்டா நிறுவன சி.இ.ஓ.வான மார்க் ஜுகர்பெர்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisement

அதில், ஒரே பெயரைக் கொண்டுள்ளதால் தனது பேஸ்புக் கணக்கு 5 முறை முடக்கப்பட்டது என்றும், கணக்கு முடக்கப்பட்டதால் தனக்கு விளம்பர வருவாய் இழப்பு ஏற்பட்டதால் இழப்பீடு தரவேண்டும் என முறையிட்டுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளில் மெட்டா நிறுவனம் தனது வணிகக் கணக்கை 5 முறையும், தனிப்பட்ட கணக்கை 4 முறையும் முடக்கியது.

எனக்கூறும் அவர், போலி பெயர் ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டுகளின் கீழ் தனது பக்கங்களை மூடியதற்காக தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா அலட்சியமாக செயல்பட்டுள்ளது என குற்றம் சாட்டுகிறார்.

Advertisement

ஒவ்வொரு முறையும் பேஸ்புக் கணக்கை திரும்பப் பெற பல மாதங்கள் ஆனது. கடைசியாக தனது கணக்கைத் திரும்பப் பெற 6 மாதங்கள் ஆனது. 

பேஸ்புக்கில் இல்லாததால் விளம்பரம் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு செலவுகளில் ஆயிரக்கணக்கான டாலர்களை இழந்துள்ளேன்.

வழக்கறிஞர் மார்க் தனது போராட்டங்களை விவரிக்கும் வகையில் ஒரு வலைதளத்தையும் உருவாக்கியுள்ளார். ஒரே பெயரை கொண்டதால் ஏற்பட்ட இந்தக் குழப்பம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன