வணிகம்
விண்ணை முட்டிய தங்கத்தின் விலை! இன்னைக்கு ரேட் செக் பண்ணுங்க மக்களே
விண்ணை முட்டிய தங்கத்தின் விலை! இன்னைக்கு ரேட் செக் பண்ணுங்க மக்களே
கடந்த மாதம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை கிடுகிடுவென ஏறிக்கொண்டிருக்கிறது. இது சாமானிய மக்களின் கனவை கலைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டுவரும் தங்கத்தின் விலை, கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி, வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ. 78,000-ஐ தாண்டியது.அதிலும் குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், வரலாற்றிலேயே முதன்முறையாக, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 80,000-ஐ கடந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.10,000-ஐ தொட்டது. ஆம்! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 80,040-க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.10,005-க்கு விற்பனை செய்யப்பட்டது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தங்கத்தின் விலை ரூ. 5,000 அதிகரித்திருப்பது, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. தங்கத்தின் இந்த தொடர் விலை உயர்வால், திருமணத்திற்கு நகைகள் வாங்க திட்டமிட்டிருந்தவர்களும், வீட்டிற்கு நகை சேர்க்க விரும்பிய இல்லத்தரசிகளும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.இந்நிலையில், இன்று (செப்டம்பர் 8, 2025) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து, சாமானியர்களுக்கு ஒரு சிறிய ஆறுதலை அளித்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் ரூ. 280 குறைந்து, ரூ. 79,760-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து, ரூ. 9,970-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.137-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை குறைவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது தெரியவில்லை. ஆயினும், இந்த சிறிய விலை குறைப்பு, தங்கம் வாங்க நினைப்போருக்கு ஒரு வாய்ப்பாக அமையக்கூடும். தங்கத்தின் விலை மீண்டும் உயருமா அல்லது இந்த விலையிலேயே நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
