இந்தியா
ஆட்டோவில் ரகசிய அறை வைத்து மது கடத்தல்; விழுப்புரம் வாலிபர் புதுச்சேரியில் கைது
ஆட்டோவில் ரகசிய அறை வைத்து மது கடத்தல்; விழுப்புரம் வாலிபர் புதுச்சேரியில் கைது
ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். ஆட்டோவில் இருந்து 400 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுமேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் அருகே உதவி ஆய்வாளர்கள் லியோ சார்லஸ், ராபர்ட் மற்றும் காவலர்கள் தலைமையில் வாகனத் சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து அவரை போலீசார் விசாரணை செய்ததில் விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சபாபதி (31) எனவும் இவர் புதுச்சேரியில் இருந்து விற்பனைக்காக மதுபானங்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கண்ட சபாபதி விழுப்புரம் அண்ணா நகரை சேர்ந்த சங்கர் என்கிற பானை சங்கர் என்பவருக்காக புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய எதிரி பானை சங்கர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரிடம் இருந்து ஒரு ஆட்டோ, 400 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
