வணிகம்
யமஹா ஏராக்ஸ்-க்கு போட்டியாக களமிறங்கிய ஹீரோ சூம் 160: லிக்யூட்-கூல்டு எஞ்சினுடன் மாஸ் என்ட்ரி
யமஹா ஏராக்ஸ்-க்கு போட்டியாக களமிறங்கிய ஹீரோ சூம் 160: லிக்யூட்-கூல்டு எஞ்சினுடன் மாஸ் என்ட்ரி
இந்திய டு வீலர் சந்தையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் முயற்சியில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது நீண்டகால காத்திருப்புக்குப்பின், சூம் 160 மேக்ஸிஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. நகர்ப்புற பயணங்களுக்கு மட்டுமின்றி, சாகச விரும்பிகளுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சூம் 160, யமஹா ஏராக்ஸ் 155-க்கு நேரடி போட்டியாக களமிறங்கியுள்ளது.முதன்முதலாக, ஹீரோ நிறுவனத்தின் ஸ்கூட்டரில் லிக்குவிட் கூல்டு (liquid-cooled) எஞ்சின் இடம்பெற்றுள்ளது என்பது இதன் தனிச்சிறப்பு. பாரத் மொபிலிட்டி ஷோ-வில் அறிமுகமானபோது இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த இந்த சூம் 160, ‘சூப்பர் ஸ்கூட்டர்’ என்ற புதிய வகையை அறிமுகப்படுத்துகிறது.சக்தி, துல்லியம் மற்றும் சாகசப் பயணங்களுக்கான வடிவமைப்பு என அனைத்திலும் சூம் 160 ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என்று ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. “நகர்ப்புறப் பயணங்கள் முதல் சவாலான நிலப்பரப்புகள் வரை அனைத்தையும் சமாளிக்கும் வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் பயணம் மட்டுமல்ல, அது ஒரு சுதந்திரமான அனுபவம்,” என்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்திய வணிகப் பிரிவின் தலைவர் அஷுதோஷ் வர்மா கூறியுள்ளார்.சூம் 160-ன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை!எஞ்சின்: 156சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின்சக்தி: 14.6 பிஹெச்பிடார்க்: 14 என்எம்கியர்பாக்ஸ்: சிவிடிசஸ்பென்ஷன்: டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் (முன்புறம்), இரட்டை ஷாக் அப்சார்பர் (பின்புறம்)பிரேக்: டிஸ்க் பிரேக் (முன்புறம்), ட்ரம் பிரேக் (பின்புறம்)சக்கரங்கள்: 14-இன்ச்எடை: 142 கிலோகூடுதல் அம்சங்கள்: டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், கீலெஸ் இக்னிஷன், ரிமோட் பூட் ஓபனிங், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்விலை: ரூ. 1.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)விரைவில், ஹீரோ பிரீமியா டீலர்ஷிப்கள் மற்றும் நிறுவனத்தின் ஆன்லைன் தளத்தில் இந்த ஸ்கூட்டரை புக் செய்யலாம்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
