Connect with us

விளையாட்டு

3 போட்டியில் 2 தோல்வி… மீண்டு வருமா தமிழ் தலைவாஸ்?

Published

on

Tamil Thalaivas vs Bengal Warriors PKL 12 Tamil News

Loading

3 போட்டியில் 2 தோல்வி… மீண்டு வருமா தமிழ் தலைவாஸ்?

12 அணிகள் அணிகள் ஆடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் வருகிற ஆகஸ்ட் 29 முதல் நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் இந்தத் தொடரில் முதல் கட்ட போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில், சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் ஆகியிருக்கிறது. இந்த 3 போட்டிகளில் 2-ல் தோல்வி கண்டு புள்ளிகள் பட்டியலில் 2 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் இருக்கிறது. புள்ளிகள் பட்டியலில் முன்னேற அந்த அணிக்கு தொடர் வெற்றிகள் தேவைப்படும் நிலையில், அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தொடக்கப் போட்டியை வெற்றியுடன் தொடங்கி தமிழ் தலைவாஸ், அடுத்த ஆட்டத்தில் யு-மும்பா அணியிடம் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. தொடர்ந்து, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியிடம் 9 புள்ளிகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி முகத்தில் இருந்து  முன்னேற அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. வெள்ளிக்கிழமை (செப்டம்பர்.12) அன்று பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிராக களமிறங்குகிறது. இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள பெங்கால் வாரியர்ஸ் ஒரு போட்டியில் மட்டுமே வென்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அதனால், இவ்விரு அணிகள் மோதும் போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முதல் கட்ட ஆட்டங்களில் வெற்றியைப் பெற்று முன்னேறும் அணிகள் அடுத்தடுத்து நடக்கும் ஆட்டங்களில் வெல்லும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் நிலையான இடத்தைப் பிடிக்கலாம். தோல்வி முகம் தொடர்ந்தால், வீரர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும். அதனால், அணி பல்வேறு பின்னடைவுகளை சந்திக்கும். எனவே, இந்தப் போட்டியில் வென்று எந்த அணி முன்னேறும் என்பதைப் பார்ப்பதில் சுவாரசியமாக இருக்கும். அதேநேரத்தில், பவன் செஹ்ராவத் தலைமையிலான தமிழ் தலைவாஸ் வெற்றியை ருசிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன