இந்தியா
அநுர வரமுன் நான் கச்சத்தீவில் வந்து நிற்பேன்; சீமான் தெரிவிப்பு!
அநுர வரமுன் நான் கச்சத்தீவில் வந்து நிற்பேன்; சீமான் தெரிவிப்பு!
நான் முதலமைச்சராக தெரிவானால் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரமுன் நான் கச்சத்தீவில் வந்து நிற்பேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு எமது சொத்து அதனை நான் முதலமைச்சராக தெரிவானதும் நிச்சயமாக மீட்டெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தமை தமிழக அரசியலில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் சீமான் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
