Connect with us

தொழில்நுட்பம்

கைகளில் அடங்கும் கேமிங் அசுரன்… லெனோவா லெஜியன் கோ 2-ன் வியக்கவைக்கும் அம்சங்கள்!

Published

on

Lenovo Legion Go 2

Loading

கைகளில் அடங்கும் கேமிங் அசுரன்… லெனோவா லெஜியன் கோ 2-ன் வியக்கவைக்கும் அம்சங்கள்!

லெனோவா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கேமிங் கையடக்கச் சாதனமான லெனோவா லெஜியன் கோ 2 (Lenovo Legion Go 2), பெர்லினில் நடந்த பிரமாண்டமான IFA கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே லீக் ஆன தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், இந்த புதிய சாதனம் அதன் சக்திவாய்ந்த அம்சங்களுடன் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளது. இந்த சாதனம் செப்.2025 முதல் சந்தைகளில் கிடைக்கும்.அசத்தும் அம்சங்கள்!இந்த லெஜியன் கோ 2, கேமிங் உலகையே அதிர வைக்கும் வகையில், AMD Ryzen Z2 Extreme சிப் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 32GB ரேம் மற்றும் 2TB வரையிலான SSD ஸ்டோரேஜுடன் இணைந்திருப்பது கூடுதல் சிறப்பு. விண்டோஸ் 11 இயங்குதளத்தில் இயங்கும் இந்த சாதனம், கேமிங்கை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. இதன் மிக முக்கியமான அம்சம், 8.8 இன்ச் OLED திரை. பிரிக்கக் கூடிய ட்ரூஸ்ட்ரைக் (TrueStrike) கன்ட்ரோலர்களுடன், இந்த சாதனம் 295.6மிமீ x 136.7மிமீ x 42.25மிமீ அளவு கொண்டது மற்றும் சுமார் 920 கிராம் எடையுடையது.படங்களை பிரமிக்க வைக்கும் துல்லியத்துடனும், வண்ணங்களுடனும் காட்சிப்படுத்துகிறது. மேலும், இதன் பிரிக்கக்கூடிய கன்ட்ரோலர்கள் (detachable controllers) கேமிங் அனுபவத்தை மேலும் மேம்படுத்துகின்றன. பேட்டரி பற்றி சொல்ல வேண்டுமென்றால், முந்தைய மாடலை விட 50% அதிக கொள்ளளவு கொண்ட 78Whr பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 65W AC அடாப்டர் மூலம் சார்ஜ் செய்யப்படுகிறது. இது நீண்ட நேரம் கேம் விளையாட உதவும்.விலை, கிடைக்கும் தேதிபிரம்மாண்டமான அம்சங்களுக்கு ஏற்ற விலைதான். லெனோவா லெஜியன் கோ 2-ன் ஆரம்ப விலை EUR 999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,03,000) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்.2025 முதல் கிடைக்கும். இந்த சாதனம் 4 வகைகளில் வெளியிடப்பட உள்ளது. அதில், AMD Ryzen Z2 Extreme, 32GB ரேம் மற்றும் 2TB ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் மாடல் கேமர்களின் கனவு சாதனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. லெனோவாவின் இந்தப் புதிய லெஜியன் கோ 2, கேமிங் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன