டி.வி
பாக்கியலட்சுமி சீரியல்ல யாரும் பார்க்காத அரிய புகைப்படம் இதோ..
பாக்கியலட்சுமி சீரியல்ல யாரும் பார்க்காத அரிய புகைப்படம் இதோ..
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து முடிவுக்கு வந்தது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பாக்கியலட்சுமி சீரியல் பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சீரியலின் கதாநாயகியான பாக்கியா கணவரால் கைவிடப்பட்டார். அதன்பின் தனது குழந்தைகளை எப்படி வளர்த்து ஆளாக்குகின்றார் என்றும், ராதிகா என்ற கேரக்டரும் கணவரால் பாதிக்கப்பட்டு தனது பிள்ளையை வளர்ப்பதற்கு தனி முயற்சியில் இறங்குகின்றார்.அதேபோல பணி பெண்ணாக காணப்பட்ட செல்வி தனது மகனை வீட்டு வேலை செய்தே கலெக்டர் ஆகியுள்ளார். இது அத்தனைக்கும் இறுதியில் பணம் தான் முக்கியம் என்று பெண்ணின் தன்னம்பிக்கையும் எடுத்துக்காட்டி இந்த சீரியல் முடிவுக்கு வந்தது.பாக்கியலட்சுமி சீரியலின் கிளைமாக்ஸில் வீட்டார்கள் பார்த்து வைத்த கல்யாணத்தால் இனியா பெரிதும் பாதிக்கப்படுகின்றார். அதன் பின்பு அவர் ஏற்கனவே காதலித்த செல்வியின் மகனை திருமணம் செய்து வைக்கின்றார்கள். இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் பார்க்காத அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அது இனியா கல்யாணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாக காணப்படுகின்றது. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு இந்த சீரியலை பலரும் மிஸ் பண்ணுவதாக தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
