Connect with us

விளையாட்டு

ஒழுங்கு நடவடிக்கை தீவிரம்; கேப்டனை விடுவித்த தமிழ் தலைவாஸ்: அடுத்த கேப்டன் யார்?

Published

on

Pawan shre

Loading

ஒழுங்கு நடவடிக்கை தீவிரம்; கேப்டனை விடுவித்த தமிழ் தலைவாஸ்: அடுத்த கேப்டன் யார்?

ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இந்த சீசனின் மீதமுள்ள ஆட்டங்களில் இருந்து பவன் செஹ்ராவத் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தலைவாஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது கபடி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் புரோ கபடி லீக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்பூர் பின்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், பாட்னா பைரட்ஸ், தெலுங்கு டைட்டின்ஸ், யூ மும்பை, யூபி யோத்தாஸ் என மொத்தம் 12 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்று வருகிறது.இந்த போட்டி இதுவரை 11 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 12-வது சீசன், தற்போது நடைறெ்று வருகிறது. இந்த சீசனில் இதுவரை மொத்தம் 4 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இதில் நேற்று நடைபெற்ற பெங்கால் வாரியஸ் அணிக்கு எதிராக ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.இதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 16-ந் தேதி தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூர் புல்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ள நிலையில், தற்போது தமிழ் தலைவாஸ அணியில் இருந்து இருந்து கேப்டன் பவன் செஹ்ராவத் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு முதல்முறையாக தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடிய பவன் செஹ்ராவத், 2025-ம் ஆண்டு மீண்டும் தமிழ் தலைவாஸ் அணியில் இடம் பிடித்தார். இந்த முறை அவருக்கு கேப்டன் பதவியும் அளிக்கப்பட்டது.தெலுங்கு டைட்டின்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 7 புள்ளிகள், 2-வது போட்டியில் யூ மும்பா அணிக்கு எதிராக 7 புள்ளிகள், குஜராத் ஜெய்ண்ஸ் அணிக்கு எதிரான 3-வது போட்டியில் 5 புள்ளிகள் எடுத்த பவன் செஹ்ராவத், நேற்று நடைபெற்ற, பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கவில்லை. இதனிடைய தற்போது அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாக அணி நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ் தலைவாஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பவன் செஹ்ராவத் மீதமுள்ள சீசனுக்கான அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார், இந்த முடிவு உரிய பரிசீலனைக்கு பிறகும், அணியின் நடத்தை விதிகளுக்கு இணங்கவும் எடுக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளது, இந்த அறிவிப்பு தமிழ் தலைவாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியை சேர்ந்த பவன் செஹ்ராவத் இதற்கு முன்பு, பெங்களூர், குஜராத், தெலுங்கு டைட்டன்ஸ் உள்ளிட்ட அணிகளில் விளையாடியுள்ளார். புரோ கபடி லீக்கில், கடந்த 2018-ம் ஆண்டு மிகவும் மதிப்புமிக்க வீரர் என்ற விருதினை வெற்றிருந்தார். இந்திய அரசின் சார்பில் கடந்த 2024-ம் ஆண்டு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன