இந்தியா
டெல்லியில் பிரபல தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் பிரபல தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன.
அந்த வகையில் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வகையில் டெல்லியில் பிரபல தாஜ் ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
‘தாஜ் ஹோட்டலில் உள்ள விருந்தினர்கள் அனைவரும் கடவுளிடம் அனுப்பப்படுவார்கள்’ என்ற வாசகத்துடன் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து ஹோட்டலில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
