Connect with us

தொழில்நுட்பம்

மணிக்கு 38,000 கி.மீ. வேகத்தில் பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்… எச்சரிக்கை மணி அடிக்கும் நாசா!

Published

on

NASA tracks 538-foot asteroid

Loading

மணிக்கு 38,000 கி.மீ. வேகத்தில் பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்… எச்சரிக்கை மணி அடிக்கும் நாசா!

விண்வெளியில் என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால்,  நாசா விஞ்ஞானிகள் ஒவ்வொரு நொடியும் விண்வெளியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். அப்படி அவர்கள் கண்டுபிடித்த அதிர்ச்சிகரமான தகவல் இதோ. அடுத்த வாரம், அதாவது செப்டம்பர் 18 அன்று, நம் புவியை நோக்கி ஒரு மாபெரும் விண்கல் மிக வேகமாக வந்துகொண்டிருக்கிறது. அதன் பெயர் 2025 FA22. இந்த விண்கல் சுமார் 538 அடி உயரம் கொண்டது. இது ஒரு பெரிய கட்டிடத்திற்கு சமம்! மேலும், இதன் வேகம் மணிக்கு 38,624 கி.மீ. என்று நாசா தெரிவித்துள்ளது. கற்பனை செய்து பாருங்கள். எவ்வளவு வேகமாகப் பயணிக்கிறது என்று!இந்த விண்கல் புவியிலிருந்து சுமார் 8 லட்சத்து 42 ஆயிரம் கி.மீ. தொலைவில், நம்முடைய கிரகத்தை கடந்து செல்லும். இது விண்வெளி தூரத்தின் படி, மிகவும் நெருக்கமான தூரம்தான். இந்த விண்கல் புவியின் சுற்றுப்பாதையை கடக்கும் ‘அட்டென்’ (Aten) என்ற குழுவை சேர்ந்தது. இதுபோன்ற விண்கற்கள் எப்போதும் புவியைக் கண்காணிக்கும் விஞ்ஞானிகளின் ரேடார் பார்வையில் இருக்கும்.கண்காணிப்பு ஏன் அவசியம்?விஞ்ஞானிகள் இந்த விண்கல்லை ‘சாத்தியமான அபாயகரமான விண்கல்’ (Potentially Hazardous Asteroid – PHA) என வகைப்படுத்தியுள்ளனர். ஒரு விண்கல் 140 மீட்டருக்கு மேல் இருந்து, 7.5 மில்லியன் கி.மீ. தொலைவுக்குள் வந்தால், அதை இவ்வாறு வகைப்படுத்துவார்கள். இதனால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதியாகச் சொல்கிறார்கள். ஆனால், அதன் பாதையில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட, அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால்தான், இந்த விண்கல்லை அவர்கள் தொடர்ந்து மிக கவனமாகப் பின்தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன