இந்தியா
ஜார்க்கண்டில் துப்பாக்கிச் சண்டை: ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் உட்பட 3 பேர் சுட்டுக் கொலை
ஜார்க்கண்டில் துப்பாக்கிச் சண்டை: ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் உட்பட 3 பேர் சுட்டுக் கொலை
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், தலைக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் உட்பட 3 மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டனர் எனப் போலீசார் தெரிவித்தனர்.ஆங்கிலத்தில் படிக்க:கோரஹர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்தித்ரி காட்டில், இன்று காலை 6 மணியளவில், தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த சஹதேவ் சோரன் என்பவரின் குழுவினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இந்த மோதல் வெடித்ததாக ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.“தேடுதல் நடவடிக்கையின் போது, 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த சஹதேவ் சோரன் மற்றும் மேலும் 2 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.மேலும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று அந்த மூத்த அதிகாரி கூறினார்.
