விளையாட்டு
பெங்களூரு புல்ஸை சமாளிக்குமா தமிழ் தலைவாஸ்? இன்றைய போட்டியில் மோதல்
பெங்களூரு புல்ஸை சமாளிக்குமா தமிழ் தலைவாஸ்? இன்றைய போட்டியில் மோதல்
12 அணிகள் அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் ஆகஸ்ட் 29 முதல் நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் இந்தத் தொடரில் முதல் கட்ட போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடந்தது. தற்போது இரண்டாம் கட்ட ஆட்டங்கள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் உள் அரங்க மைதானத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2-ல் வெற்றி, 2-ல் தோல்வி என 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது. 2 தொடர் தோல்வியில் இருந்து மீண்டுள்ள அந்த அணி அடுத்தடுத்து வெற்றியைப் பெற ஆவல் கொண்டுள்ளது. மறுபுறம், இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 4-ல் வெற்றி, 3-ல் தோல்வியுற்றுள்ள பெங்களூரு புல்ஸ் 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தங்களது ஆதிக்கத்தை தொடரவே நினைக்கும். அதற்கு முட்டுக்கட்டை போடுமா தமிழ் தலைவாஸ்? என்பது இன்றைய ஆட்டத்தில் முடிவில் தெரிந்து விடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
