தொழில்நுட்பம்
ரூ79,999 விலைக்கு விற்ற மொபைல் போன் வெறும் ரூ34,999: பட்டையை கிளப்பும் ஃப்ளிப்கார்ட் ஆஃபர்; மிஸ் பண்ணாதீங்க மக்களே!
ரூ79,999 விலைக்கு விற்ற மொபைல் போன் வெறும் ரூ34,999: பட்டையை கிளப்பும் ஃப்ளிப்கார்ட் ஆஃபர்; மிஸ் பண்ணாதீங்க மக்களே!
பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்தாண்டு, ஸ்மார்ட்போன்களுக்கான ஆஃபர்கள்தான் ஹைலைட்! குறிப்பாக, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பது, இந்தாண்டு வெளியான நத்திங் (Nothing) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கான அதிரடி விலை குறைப்புகள். வழக்கமாக கிடைக்கும் தள்ளுபடிகளை விட, இந்த முறை வங்கி ஆஃபர்களுடன் சேர்த்து மிகப்பெரிய அளவில் விலை குறையப் போவதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. நத்திங் பிரியர்கள் இந்த வாய்ப்பை தவறவிட மாட்டார்கள் எனத் தெரிகிறது.Nothing Phone 3 – ₹45,000 தள்ளுபடி!நத்திங் போன்களில் இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்டது நத்திங் போன் 3 தான். இதன் அறிமுக விலை ரூ.79,999. ஆனால், பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், இது வெறும் ரூ.34,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கும் என பிளிப்கார்ட் உறுதி செய்துள்ளது. இது கிட்டத்தட்ட ரூ.45,000 வரை தள்ளுபடி!சிறப்பம்சங்கள்: Snapdragon 8s Gen 4 சிப்செட் இருப்பதால் செயல்திறன் அட்டகாசமாக இருக்கும். 6.67″ AMOLED டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 4500 நிட்ஸ் உச்ச பிரகாசம் போன்ற அம்சங்கள் இதை ஒரு பிரீமியம் ஃபோனாக மாற்றுகின்றன. இதன் மூன்று 50MP பின்புற கேமராக்கள், சிறந்த புகைப்பட அனுபவத்தை தரும். மேலும், இதன் தனித்துவமான வடிவமைப்பு, மற்ற போன்களிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டும்.Nothing Phone 3A & Nothing Phone 3A Proநத்திங்-இன் மற்றொரு மாடலான நத்திங் போன் 3A, அறிமுக விலையான ரூ.24,999-லிருந்து, பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ரூ.20,999 என்ற விலையில் கிடைக்கும். அதேபோல், நத்திங் போன் 3A Pro அறிமுக விலையான ரூ.29,999-லிருந்து, வெறும் ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படும். இந்த 2 போன்களிலும் Snapdragon 7s Gen 3 சிப்செட் உள்ளது. இதன் 6.77″ AMOLED டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது. Nothing Phone 3A Pro-வில் உள்ள 50MP முன்பக்க கேமரா, செல்ஃபி பிரியர்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். இந்த போன்களும், நத்திங்-இன் அடையாளமான வெளிப்படையான வடிவமைப்புடன் வந்து, IP64 (3A) மற்றும் IP69 (3A Pro) நீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறனுடன் வருகின்றன.இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், நத்திங் போன் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு இது அரிய வாய்ப்பு என்றே சொல்லலாம்!
