Connect with us

உலகம்

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய இளைஞர்

Published

on

Loading

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய இளைஞர்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், 30 வயது இந்திய தொழில்நுட்ப வல்லுநரான முகமது நிஜாமுதீன், பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க பொலிஸ் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி,தெலங்கானா மாநிலம் மகபூப்நகரைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன், செப்டெம்பர் 3ம் தேதி சாண்டா கிளாரா நகரில் உள்ள தனது வீட்டில் கத்தியுடன் இருந்ததாகவும், அப்போது அவர், தன் அறை நண்பரை கத்தியால் தாக்கி, அவரை கீழே தள்ளியதாகவும் தெரிவித்தனர். 

Advertisement

இந்நிலையில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக கிடைத்த 911 அவசர அழைப்பின் காரணமாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், நிஜாமுதீனை சுட்டு கொன்றதாக தெரிகிறது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

அதேவேளை கத்தியால் குத்தப்பட்ட அவரது அறை நண்பரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

Advertisement

இந்நிலையில் நிஜாமுதீனின் குடும்பத்தினர் இதுவொரு இனவெறி பாகுபாடு காரணமாக செய்யப்பட்ட கொலை என்று குற்றஞ்சாட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லங்கா4 (Lanka4)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன