Connect with us

விளையாட்டு

ஆதிக்கத்தை தொடருமா தமிழ் தலைவாஸ்? தெலுங்கு டைட்டன்சுடன் இன்று மோதல்

Published

on

Tamil Thalaivas vs Telugu Titans Match updates Pro Kabaddi League 12 PKL 12 Match 42 Jaipur Tamil News

Loading

ஆதிக்கத்தை தொடருமா தமிழ் தலைவாஸ்? தெலுங்கு டைட்டன்சுடன் இன்று மோதல்

12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள்அரங்க மைதானத்தில் நடைபெறும் 42-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. அர்ஜுன் தேஷ்வால் தலைமையிலான தமிழ் தலைவாஸ் இதுவரை ஆடியுள்ள 5 போட்டிகளில் 3-ல் வெற்றி, 2-ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், விஜய் மாலிக் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் 8 போட்டிகளில் 3-ல் வெற்றி, 5-ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. நடப்பு தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தொடங்கிய தமிழ் தலைவாஸ் அந்த அணியை 38-35 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. அதற்கு பதிலடி கொடுக்க தெலுங்கு டைட்டன்ஸ் திட்டமிட்டுள்ளது. தவிர, அந்த அணி கடைசி 3 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. அதிலிருந்து மீண்டு வர கடுமையாக போராடும். அதேநேரத்தில், கடைசி 2 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அதே உத்வேகத்துடன் ஆடவே நினைக்கும். எனவே, இந்த இரு அணிகள் ஆடும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன