Connect with us

விளையாட்டு

IND vs OMA LIVE Score: வெற்றியுடன் முடிக்குமா இந்தியா? ஓமனுடன் இன்று மோதல்

Published

on

India vs Oman Asia Cup 2025 Live cricket score update in Tamil

Loading

IND vs OMA LIVE Score: வெற்றியுடன் முடிக்குமா இந்தியா? ஓமனுடன் இன்று மோதல்

Ind vs Oma T20I, India vs Oman Live Score Updates today: 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரில் இதுவரை 9 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி மட்டும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஹாங்காங், ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஓமன் அணியை சந்திக்கிறது. இப்போட்டியானது இன்று இரவு 8 மணிக்கு அபுதாபியில் இருக்கும் ஷேக் சயீத் மைதானத்தில் அரங்கேறுகிறது. ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்கவே நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன