Connect with us

உலகம்

ஹாங்காங்கில் விலங்குகள் இனப்பெருக்க மையத்தில் தீ விபத்து – 26 மிருகங்கள் உயிரிழப்பு

Published

on

Loading

ஹாங்காங்கில் விலங்குகள் இனப்பெருக்க மையத்தில் தீ விபத்து – 26 மிருகங்கள் உயிரிழப்பு

ஹாங்காங்கில் உள்ள ஒரு விலங்கு வளர்ப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தால் 20 நாய்கள், ஆறு பூனைகள் உயிரிழந்துள்ளன.

நிலையத்தில் உள்ள குளுரூட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தீச்சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Advertisement

தீச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நிலையம் விலங்குகள் இனப்பெருக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் இடமாகும்.

இச்சம்பவம், நியூ டெரிடரிஸ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் தீயைப் பரவவிடாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் மனிதர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Advertisement

காயத்தால் பாதிக்கப்பட்ட நாய்க் குட்டிகளுக்குத் தீயணைப்பு வீரர்கள் முதலுதவியும் செய்தனர்.

அதேபோல் விலங்கு நிலையம் அருகே இருந்த வளாகத்தில் இருந்த 34 நாய்களும் பத்திரமாக மீட்கப்பட்டன.

விலங்கு நிலையத்தில் தீ ஏற்பட்டபோது அங்கு உரிமையாளர் யாரும் இல்லை. உரிமையாளர்கள் மாலை நேரத்தில்தான் நிலையத்திற்கு வந்தனர்.

Advertisement

தீச்சம்பவம் தொடர்பான படங்களும் நாய்களுக்குத் தீயணைப்பு வீரர்கள் உதவும் படங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

விலங்கு நிலைய உரிமையாளர்களை ஹாங்காங் காவல்துறையினர் எச்சரித்தனர். மேலும் இனி வரும் நாள்களில் அடிக்கடி விலங்கு நிலையத்தில் சோதனை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்

லங்கா4 (Lanka4)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன