டி.வி
வீட்டு பத்திரத்தை சாரதாவிடம் ஒப்படைக்கும் விஜய்… புதிய திருப்பத்துடன் மகாநதி சீரியல்.!
வீட்டு பத்திரத்தை சாரதாவிடம் ஒப்படைக்கும் விஜய்… புதிய திருப்பத்துடன் மகாநதி சீரியல்.!
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்ற மகாநதி சீரியலின் promo-வில் கங்கா காலையில போனவங்க இன்னும் வீட்ட வந்து சேரல அப்புடி எங்க தான் போய்ட்டாங்களோ தெரியல என்று சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட காவேரி வருவாங்க அக்கா நீ கவலைப்படாத என்று சொல்லுறார். பின் விஜயும் குமரனும் வீட்ட வந்து நிக்கிறார்கள். இதனை அடுத்து விஜய் வீட்டு பத்திரத்தை சாரதா கிட்ட கொண்டு போய் கொடுக்கிறார். அதைப் பார்த்த சாரதா இந்த வீட்டைக் கட்ட அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா என்று சொல்லி அழுகிறார். அதைப் பார்த்த விஜய் தான் உங்களோட இருக்கிற வரைக்கும் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது… நான் இருக்கேன் என்று சொல்லுறார். இதுதான் இனிநிகழப்போவது.
