விளையாட்டு
IND vs PAK: மீண்டும் பாகிஸ்தானுடன் மல்லுக்கட்டும் இந்தியா… போட்டியை லைவ் ஆக பார்ப்பது எப்படி?
IND vs PAK: மீண்டும் பாகிஸ்தானுடன் மல்லுக்கட்டும் இந்தியா… போட்டியை லைவ் ஆக பார்ப்பது எப்படி?
India vs Pakistan Super 4 T20 Cricket Live Streaming: 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), இலங்கை, வங்கதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் இரு இடங்களை பிடித்து ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த நிலையில், ‘சூப்பர் 4’ சுற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானுடன் மல்லுக்கட்டுகிறது. இந்தியா – பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2025 சூப்பர் ஃபோர் போட்டியை இந்தியாவில் நேரலையில் பார்ப்பது எப்படி? இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2025 சூப்பர் ஃபோர் கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பு சோனி லிவ் செயலி மற்றும் இணையதளத்தில் கிடைக்கும். ஆசியா கோப்பை கிரிக்கெட்டின் நேரடி ஒளிபரப்பு இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1 எச்.டி, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 மற்றும் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1 எச்.டி போன்ற தொலைக்காட்சி சேனல்களில் பார்க்கலாம். பிராந்திய மொழி ஒளிபரப்பு சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3 (இந்தி), சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3 எச்.டி (இந்தி), சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 (தமிழ் மற்றும் தெலுங்கு) தொலைக்காட்சி சேனல்களில் பார்க்கலாம்.
