விளையாட்டு
IND vs PAK LIVE Sore: ஆதிக்கத்தை தொடருமா இந்தியா? மீண்டும் பாகிஸ்தானுடன் இன்று மோதல்!
IND vs PAK LIVE Sore: ஆதிக்கத்தை தொடருமா இந்தியா? மீண்டும் பாகிஸ்தானுடன் இன்று மோதல்!
Ind vs Pak Super 4, India vs Pakistan Live Score Updates today: 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), இலங்கை, வங்கதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் இரு இடங்களை பிடித்து ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த நிலையில், ‘சூப்பர் 4’ சுற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானுடன் மல்லுக்கட்டுகிறது. நடப்பு தொடரில் இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் வென்று இந்திய அணி வெற்றி நடை போட்டு வருகிறது. இத்தகைய சூழலில், லீக் சுற்றில் உதை வாங்கிய பரம போட்டியாளரான பாகிஸ்தானை மீண்டும் சந்திக்கிறது இந்தியா. இப்போட்டியையும் வென்று சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
