Connect with us

இந்தியா

புதுச்சேரியில் 5–வது முறையாக தி.மு.க ஆட்சி அமைக்கும்: ஆர்.எஸ். பாரதி பேட்டி

Published

on

rs barathi

Loading

புதுச்சேரியில் 5–வது முறையாக தி.மு.க ஆட்சி அமைக்கும்: ஆர்.எஸ். பாரதி பேட்டி

புதுச்சேரி மாநிலம் கதிர்காமம் தொகுதி திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழா, கலைஞர் நூலகம் திறப்பு விழா மற்றும் கதிர்காமம் தொகுதி திமுக அலுவலக திறப்பு விழா என முப்பெரும் விழா சண்முகாபுரம் காவல் நிலையம் அருகில் நடைபெற்றது. கதிர்காமம் தொகுதி கழகச் செயலாளர் ப. வடிவேல் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ந. தங்கவேல், தொகுதி துணைச் செயலாளர் தங்க. தமிழ்வாணன் முன்னிலை வகித்தனர்.விழாவில், தலைமைக் கழக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.எஸ். பாரதி அவர்களும், புதுச்சேரி மாநில கழக அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு இரா. சிவா அவர்களும்  கலந்து கொண்டு, டாக்டர் கலைஞர் திருவுருவச் சிலை, நூலகம் மற்றும் கழக அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்த விழாவில், அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், எல். சம்பத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பூ. மூர்த்தி, நந்தா. சரவணன், துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் முகிலன், டாக்டர் நித்திஷ் தொகுதி செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, புதுச்சேரியில் ஏற்கனவே பாரூக் மரைக்காயர், எம்.டி. ராமச்சந்திரன், ஆர்.வீ. ஜானகிராமன் என 3 முதலமைச்சர்கள் திமுக சார்பில் இருந்துள்ளார்கள், 4 முறை ஆட்சியமைத்துள்ள நிலையில் தற்போது 5வது முறையாக திமுக ஆட்சி அமைக்க உறுப்பினர் சேர்க்கை என்பது நடைபெறவுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் வகையில் உழைத்து கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தார். மேலும் தொகுதி பங்கீடு குறித்து உள்ளூர் தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதுகுறித்து இறுதி முடிவை ராகுல் காந்தியும், ஸ்டாலினும் தான் எடுப்பார்கள் என கூறினார்.மேலும் தமிழகத்தில் திமுகவுக்கு நாங்கள் தான் போட்டி என அதிமுக – தவெக போன்ற கட்சிகள் சொல்கிறார்கள், எங்களுக்கு யார் போட்டி என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும், தற்போதைய சூழலில் நாங்கள் வலுவாக உள்ளோம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் 2019ல் இருந்தே எடப்பாடி பழனிசாமி எங்கள் கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும் என சொல்லிக்கொண்டு இருக்கிறார், ஆனால் தற்போது அவர் கட்சியில் இருந்தே பாதி பேர் வெளியேறிவிட்டனர். முதலில் எடப்பாடி அவர் நிலைமையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என கூறினார்.அப்போது விஜய் செல்லும் இடமெல்லாம் அதிக கூட்டம் கூடுவதை எப்படி பார்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த அவர், கடந்த 76 வருடத்தில் பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் சந்தித்த கட்சி திமுக, தயவு செய்து விஜய் பற்றி கேட்காதீர்கள் என்றும், கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக ஒருவர் அரசியலில் நிலைத்துவிட முடியாது என்றும் கூட்டத்தை கூட்டியும் இன்று அரசியலில் தடம் தெரியாமல் போனதற்கு பலபேர் எடுத்துக்காட்டாக உள்ளனர் என தெரிவித்தார்.செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன