இலங்கை
சிறுவர்கள் தண்டிப்புத் தவிர்ப்பு சட்டவரைவுக்கு அங்கீகாரம்!
சிறுவர்கள் தண்டிப்புத் தவிர்ப்பு சட்டவரைவுக்கு அங்கீகாரம்!
சிறுவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தண்டனை முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், நாடாளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ள தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டவரைவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் உடல் ரீதியான தண்டனைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு சட்டரீதியாகத் தண்டனையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்தச் சட்டவரைவு கொண்டுவரப்பட்டுள்ளது என்று மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இத்திக தெரிவித்துள்ளார்.
சிறுவர் தடுப்பு நிலையங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்ற உடல்ரீதியானதண்டனைகளை நிறுத்துவதற்கு, இலங்கையில் நீண்டகாலமாக சட்ட ஏற்பாடுகள் காணப்படவில்லை. இது தொடர்பில் பல்வேறு அரசியற்கட்சிகள், சர்வதேச அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்புகளால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்ட நிலையிலேயே, இந்தச் சட்டவரைவு முன்வைக்கப்பட்டது என்று சட்டம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
