இலங்கை
தே.ம.சக்தி ஆட்சியிலும் தமிழருக்கு ஏமாற்றமே; சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டு!
தே.ம.சக்தி ஆட்சியிலும் தமிழருக்கு ஏமாற்றமே; சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டு!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்குவந்து ஓராண்டு கடந்திருந்தாலும் தமிழ்மக்களின் முக்கியமான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
நாட்டில் மாகாணசபைத் தேர்தல் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் தொடர்பில் உறுதியளிக்கப்பட்டது. புதிய அரசமைப்பு சம்பந்தமாகவும் வாக்குறுதிவழங்கப்பட்டது. ஆனால் இவை பற்றித் தற்போது கதைக்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்ததை விடவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. கடந்தகால அரசுகள் கூடசெய்யமாட்டோம் என வெளிப்படையாகக் கூறின. ஆனால் தாங்கள் இனவாதிகள் இல்லை. வடக்கு மக்கள்மீது தங்களுக்குதான் கரிசனை உள்ளது எனக் கூறிக் கூறியே எமது மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. மக்கள் எதையும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே யாழுக்கு அவசர அவசரமாக சென்று. சில அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன- என்றார்.
