இலங்கை
போதைப்பொருள் வலையில் கடற்றொழிலாளர்கள் சிக்கல்!
போதைப்பொருள் வலையில் கடற்றொழிலாளர்கள் சிக்கல்!
தடுப்பதற்கு வேலைத்திட்டம் – கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி? என்பதுதொடர்பில் கடற்றொழிலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்குப் பணிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருடன் நடத்திய கலந்துரையாடலின்போது இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
இதன்போது கடற்றொழிலாளர்கள் போதைப்பொருள் கடத்தலுக்குக் கடத்தல்காரர்களாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துமாறு அமைச்சர் உத்தரவிட்டார். அதேபோல இதுபற்றிக் கடற்படையினருக்கும் தெரியப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதியமைச் சர்ரத்ன கமகே, அமைச்சின் செயலாளர் பி.கே. கோலித கமல்ஜினதாச மற்றும் துறைசார் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
