இலங்கை
இரத்ததான முகாம்!
இரத்ததான முகாம்!
மருத்துவமனை இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதித்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம், கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் இந்து இளைஞர் விளையாட்டு கழகம் இணைந்து விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினூடாக இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இந்த இரத்ததான முகாமானது நாளை சனிக்கிழமை(27) காலை 09மணிமுதல் மாலை 03 மணி வரை கருகம்பனை நூலகத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே தன்னார்வ குருதிக் கொடையாளர்களுடைய பங்களிப்பை ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
