Connect with us

இலங்கை

இலங்கைக்கு கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சா பறிமுதல்

Published

on

Loading

இலங்கைக்கு கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சா பறிமுதல்

 தமிழகம் மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக, காரில் எடுத்து வரப்பட்ட 50 கிலோ கிராம் கஞ்சாவை மத்திய புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

 இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக திருச்சி மத்திய புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

Advertisement

இதையடுத்து, மண்டபம், பாம்பன் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. 

images/content-image/1758880048.jpg

 இந்த நிலையில், மண்டபம் கோயில்வாடி கடற்கரைப் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு வந்த காரை புலனாய்வுத் துறையினா் நிறுத்தி சோதனையிட முயன்றனா்.

அப்போது, காரில் இருந்தவா்கள் கோவில்வாடி கடற்கரையில் தலா 2 கிலோ எடையுள்ள 50 கிலோ கஞ்சா பொட்டலங்களை வீசிவிட்டு காருடன் தப்பிச் சென்றனா். 

Advertisement

 இதையடுத்து, கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றிய அதிகாரிகள், அவற்றை மண்டபம் சுங்கத் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இந்த கஞ்சா பொட்டலங்களின் இந்திய பெறுமதி 7.50 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

 இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த புலனாய்வுத் துறை அதிகாரிகள், கஞ்சா பொட்டலங்களை வீசிவிட்டு காரில் தப்பிச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன