இந்தியா
பொருளாதாரப் புயலைக் கிளப்பும் டிரம்ப்: அக்டோபர் 1 முதல் மருந்து, லாரி, கிச்சன் கேபினெட்டுக்கு 100% வரி
பொருளாதாரப் புயலைக் கிளப்பும் டிரம்ப்: அக்டோபர் 1 முதல் மருந்து, லாரி, கிச்சன் கேபினெட்டுக்கு 100% வரி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அக்டோபர் 1 முதல் இறக்குமதி செய்யப்படும் பிராண்டட் மருந்துகளுக்கு 100%, கனரக சரக்கு வாகனங்களுக்கு 25%, சமையலறை அலமாரிகளுக்கு 50% என புதிய இறக்குமதி வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளார். அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வரும் பிரதான வரிகள்:பிராண்டட் மருந்துகளுக்கு: இறக்குமதி செய்யப்படும் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100% (நூறு சதவீதம்) அதிரடித் தீர்வையை அமெரிக்கா விதிக்கும்.கனரக டிரக்குகள் (Heavy-duty trucks): இந்த வாகனங்களுக்கு 25% வரி விதிக்கப்படும்.கிச்சன் கேபினெட்ஸ் (Kitchen Cabinets): இவற்றின் இறக்குமதிக்கு 50% வரி விதிக்கப்படும்.டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பதிவில், மருந்து வரிக் குறித்த தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.”அக்டோபர் 1, 2025 முதல், எந்தவொரு நிறுவனமாவது அமெரிக்க மண்ணில் தங்கள் மருந்து உற்பத்தி ஆலையை உறுதிப்படுத்திக் கட்டினால் தவிர, பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற அனைத்து மருந்துப் பொருட்களுக்கும் நாங்கள் 100% தீர்வையை விதிக்கப் போகிறோம்,” என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.அதாவது, ஒரு மருந்து நிறுவனம் ஏற்கெனவே அமெரிக்காவில் ஆலை அமைக்கும் பணியைத் தொடங்கி இருந்தால் மட்டுமே இந்த 100% வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.அடுத்த வாரம் இன்னும் அதிக வரி!இதனுடன் நிற்காமல், அவர் இன்னும் சில பொருட்களுக்கான வரிகளையும் அறிவித்தார்:பாத்ரூம் வேனிட்டிகள் (Bathroom Vanities): 50% வரி.மெத்தை தளபாடங்கள் (Upholstered Furniture): 30% வரி.இந்த இரு புதிய வரிகளும் அடுத்த வாரமே அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்.உள்ளூர் உற்பத்திக்குக் கவசம்கனரக டிரக்குகளுக்கான 25% தீர்வைக் குறித்துப் பேசிய டிரம்ப், இது உள்ளூர் உற்பத்தியாளர்களை ‘நியாயமற்ற வெளிநாட்டுப் போட்டியிலிருந்து’ காப்பாற்றவே என்று தெரிவித்தார். இதனால், Paccar-இன் Peterbilt, Kenworth மற்றும் Daimler Truck-இன் Freightliner போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் பெரும் பயனடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.சமையலறைப் பெட்டகங்கள் மற்றும் தளபாடங்களுக்கான வரியை உயர்த்தியதற்குக் காரணம், இந்த பொருட்கள் ‘வெளியில் இருந்து அமெரிக்காவிற்குள் வெள்ளமெனப் பெருகுவதுதான்’ என்றும், இது உள்ளூர் தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரிப்பதாகவும் அவர் தனது பதிவில் குற்றம் சாட்டினார்.உலகப் பொருளாதாரத்தில் நிழல்டிரம்பின் இந்தப் புதிய வரி விதிப்பு நடவடிக்கைகள், உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தின் மீது ஒரு இருண்ட நிழலைப் பரப்பியுள்ளதுடன், வணிக முடிவெடுக்கும் நடைமுறைகளையும் முடக்கியுள்ளன.மருந்து உற்பத்தியாளர்களின் எதிர்ப்பு: ‘அமெரிக்க மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம்’ இந்த புதிய மருந்துத் தீர்வையை எதிர்த்துள்ளது. அமெரிக்காவில் நுகரப்படும் மருந்துகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் 53% மதிப்பை அமெரிக்காவே உற்பத்தி செய்வதாகவும், மீதமுள்ளவை ஐரோப்பா மற்றும் நட்பு நாடுகளிடம் இருந்து வருவதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர்.வணிக சபையின் எச்சரிக்கை: ‘அமெரிக்க வணிக சபை’ கனரக டிரக் தீர்வையை எதிர்க்கிறது. அதிக இறக்குமதி தரும் முதல் ஐந்து நாடுகள் மெக்ஸிகோ, கனடா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பின்லாந்து ஆகியவை “அமெரிக்காவின் நட்பு நாடுகள்” என்றும், இவை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல என்றும் சபை தெரிவித்துள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
