இலங்கை
போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் மூவர் கைது!
போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் மூவர் கைது!
அம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் போலி ஆவணங்கள் மற்றும் 13 மோட்டார் சைக்கிள்களுடன் மூவர் அங்குனுகொலபெலெஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரில் பிரதான சந்தேகநபர் குட்டிகல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் எனவும் அவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனவே, உங்களது மோட்டார் சைக்கிள்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள அங்குனுகொலபெலெஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் 071 8591494 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
