சினிமா
விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் மாஸான படம்.! வெளியான அப்டேட் இதோ.!!
விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் மாஸான படம்.! வெளியான அப்டேட் இதோ.!!
தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்திருப்பவர்களில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிப்பில் வித்தியாசங்களை சித்தரித்து வரும் விஜய் சேதுபதி ஆகியோர் விளங்குகின்றனர். இவர்கள் இருவரும் தற்போது புதிய ஒரு மெகா திரைப்படத்திற்காக கை கோர்த்துள்ளனர் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இந்நிலையில், பூரி ஜெகன்நாதின் பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 26), இந்தப் புதிய படத்தின் தலைப்பும், முதல் டீசரும் வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தையும், ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது.பூரி ஜெகன்நாத், பல வெற்றிப் படங்களை கொடுத்து, தெலுங்கு சினிமாவில் ஒரு மாஸ் இயக்குநராக பரிணமித்தவர். இவரது ஸ்டைலான கதை, ஆற்றல்மிக்க ஹீரோ கேரக்டர்கள், punch dialogues ஆகியவை ரசிகர்களை வசீகரிக்கும் வகையில் அமைந்திருந்தது. படக்குழு அறிவித்தபடி, இந்தப் படத்தின் அதிகாரபூர்வ தலைப்பும், அதனுடன் டீசரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியிடப்படும். இதன் அடிப்படையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இசை அமைப்பாளர், ஹீரோயின் மற்றும் பிற முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்களும் விரைவில் வெளியாவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
