இலங்கை
7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் 1000+ முறைப்பாடுகள்!
7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் 1000+ முறைப்பாடுகள்!
2025 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,126 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தண்டனைச் சட்டத்திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். வீடுகள், பாடசாலைகள், தடுப்பு மையங்கள் மற்றும் வீதிகள் போன்ற இடங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகுகின்றனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
