பொழுதுபோக்கு
கரூர் சோகம்; விஜய் மீது வழக்கு? செய்தியாளர்கள் கேள்விக்கு செந்தில் பாலாஜி பதில்
கரூர் சோகம்; விஜய் மீது வழக்கு? செய்தியாளர்கள் கேள்விக்கு செந்தில் பாலாஜி பதில்
த.வெ.க தலைவர் விஜய் இன்று (செப்.27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கரூரில் தேர்தல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர்.தொடர்ந்து, குழந்தைகள், பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார்.மேலும், பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் விரைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, “46 பேர் தனியார் மருத்துவமனையிலும் 12 பேர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும் பணிக்கு வரவழைகப்பட்டுள்ளனர். கூடுதலாக நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் இருந்து மருத்துவர்கள் வர உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். த.வெ.க தலைவர் விஜய் மீது வழக்கு தொடரப்படுமா? என்ற கேள்விக்கு முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். அதன் பிறகு இது பற்றி பேசலாம் என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
