Connect with us

இலங்கை

லஞ்சம் அல்லது ஊழலுடன் அதிகளவில் தொடர்புடைய முதல் 10 பொது சேவைகளில் காவல்துறைக்கு முதலிடம்

Published

on

Loading

லஞ்சம் அல்லது ஊழலுடன் அதிகளவில் தொடர்புடைய முதல் 10 பொது சேவைகளில் காவல்துறைக்கு முதலிடம்

இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவில் தொடர்புடைய முதல் 10 பொது சேவைகளில் பொலிஸ் முதலிடம் வகிக்கிறது. அரசியல்வாதிகள், சுங்கம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம், பாடசாலைகள், அமைச்சுக்கள் என முக்கிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

Advertisement

இந்த நிலைமை மாற்றப்பட்டால் மாத்திரமே இலஞ்ச, ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணைகள் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்களின் நிலைப்பாட்டுக்கமைய இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவு தொடர்புடையது பொலிஸார் என எம்மால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

இவ்வாறு இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் தொடர்புடைய பட்டியலில் முறையே பொலிஸார், அரசியல்வாதிகள், சுங்கம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம், பாடசாலைகள், அமைச்சுக்கள், காணி பதிவு அலுவலகம், மாகாணசபைகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், பிரதேச செயலகம், பதிவாளர் நாயக அலுவலகம் மற்றும் நீதிமன்றம் என்பன காணப்படுகின்றன.

மக்களின் நிலைப்பாட்டுக்கமைய இவை இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் தொடர்புடைய முதல் 10 நிறுவனங்களாகக் காணப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் பொருளாதாரத்துடன் தொடர்புடைய 5 பிரதான நிறுவனங்கள் காணப்படுகின்றன.

images/content-image/1759007153.jpg

————————————————————————————

Advertisement

The police ranks first among the top 10 public services most associated with bribery or corruption. Politicians, Customs, Immigration and Emigration Department, schools, and ministries are in the next places. 

Only if this situation is changed can we build a country free of bribery and corruption, said Neel Ittawela, Chairman of the Commission on Investigation of Bribery or Corruption.

He made this statement while addressing an event held in Colombo on Friday (26). He added,

Advertisement

A survey conducted by us has found that the police are most associated with bribery or corruption according to the people’s perspective.

Thus, the list of institutions associated with bribery or corruption includes the police, politicians, customs, the Department of Immigration and Emigration, schools, ministries, the Land Registry Office, provincial councils, the Foreign Employment Bureau, the Divisional Secretariat, the Registrar General’s Office and the courts.

According to the public’s perspective, these are the top 10 institutions associated with bribery or corruption. However, there are 5 main institutions related to the economy.

Advertisement

images/content-image/1759007164.jpg

————————————————————————————

අල්ලස් හෝ දූෂණයට සම්බන්ධ ඉහළම රාජ්‍ය සේවා 10 අතරට පොලිසිය පළමු ස්ථානයට පත්වේ. දේශපාලනඥයින්, රේගුව, ආගමන හා විගමන දෙපාර්තමේන්තුව, පාසල් සහ අමාත්‍යාංශ ඊළඟ ස්ථානවල සිටී. 

මෙම තත්ත්වය වෙනස් කළහොත් පමණක් අපට අල්ලස් හා දූෂණයෙන් තොර රටක් ගොඩනගා ගත හැකි බව අල්ලස් හෝ දූෂණ විමර්ශන කොමිසමේ සභාපති නීල් ඉත්තවෙල පැවසීය.

Advertisement

සිකුරාදා (26) කොළඹ පැවති උත්සවයක් අමතමින් ඔහු මෙම ප්‍රකාශය කළේය. ඔහු තවදුරටත් මෙසේ පැවසීය,

අප විසින් කරන ලද සමීක්ෂණයකින් හෙළි වී ඇත්තේ ජනතාවගේ දෘෂ්ටිකෝණයට අනුව පොලිසිය අල්ලස් හෝ දූෂණයට සම්බන්ධ බව ය.

මේ අනුව, අල්ලස් හෝ දූෂණයට සම්බන්ධ ආයතන ලැයිස්තුවට පොලිසිය, දේශපාලනඥයින්, රේගුව, ආගමන හා විගමන දෙපාර්තමේන්තුව, පාසල්, අමාත්‍යාංශ, ඉඩම් ලියාපදිංචි කිරීමේ කාර්යාලය, පළාත් සභා, විදේශ රැකියා කාර්යාංශය, ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය, රෙජිස්ට්‍රාර් ජනරාල් කාර්යාලය සහ අධිකරණ ඇතුළත් වේ.

Advertisement

මහජනතාවගේ දෘෂ්ටිකෝණයට අනුව, අල්ලස් හෝ දූෂණයට සම්බන්ධ ඉහළම ආයතන 10 මේවාය. කෙසේ වෙතත්, ආර්ථිකයට සම්බන්ධ ප්‍රධාන ආයතන 5 ක් ඇත.

லங்கா4 (Lanka4)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன