Connect with us

இலங்கை

30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சமசப்தம யோகத்தால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்

Published

on

Loading

30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சமசப்தம யோகத்தால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்

ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இப்படி கிரகங்கள் தொடர்ந்து நகரும் போது அவை மற்ற கிரகங்களுடன் இணைந்து சில யோகங்களை உருவாக்குகிறது. தற்போது சூரியனும், சனிபகவானும் இணைந்து உருவாக்கும் சம்சப்தக யோகத்தை உருவாக்குகிறது.

 சூரியனும் சனியும் இணைந்து உருவாக்கும் சம்சப்தக் யோகம் 2025 ஆம் ஆண்டின் இறுதி வரை சில ராசிகளுக்கு முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரும்.

Advertisement

எந்தெந்த ராசிக்காரர்கள் சமசப்தக யோகத்தால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள் என்று நாம் இங்கு பார்ப்போம்.

சமசப்தக யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல்வேறு பாதகமான விளைவுகளைத் தரும். அவர்கள் இந்த காலகட்டத்தில் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். அவர்கள் நினைத்த விஷயங்கள் எதுவும் இப்போதும் சாதகமாக முடிவடையாது. திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டம் நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

Advertisement

இந்த அரிய கிரக சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பல சூழ்நிலைகளில், இது மோதலுக்கு கூட வழிவகுக்கும். பொறுப்புகளை கையாளுவதில் மிகவும் கவனமாக இருங்கள்.

இல்லையெனில், அது அதிக சவால்களுக்கு வழிவகுக்கும். நீங்கள் முழு ஆர்வத்துடன் செய்யும் விஷயங்கள் கூட பெரும்பாலும் நீங்கள் விரும்பியபடி முடிவடையது. தேவையற்ற கவலைகள் உங்களைப் பாதிக்கும். எனவே, நீங்கள் ஒவ்வொரு அடியையும் முன்னோக்கி எடுத்து வைப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு, சம்சப்தக யோகம் அவர்கள் உறவுகளில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் அவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். இது அவர்களின் பொறுப்புகளை கூட மறக்க வழிவகுக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் அடிக்கடி பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளலாம்.

Advertisement

ஆரோக்கிய பிரச்சினைகளால் அதிக செலவு செய்ய நேரிடும். மன அழுத்தத்தை கையாள்வதில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் ஏற்படும் சிக்கல்கள் அவர்களின் அமைதியைக் குலைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் பல வழிகளிலும் தொந்தரவுகளை சந்திக்க நேரிடும்.

மீன ராசிக்காரர்களுக்கு, இந்த அரிய கிரக சேர்க்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பெரும்பாலும், வேலை தொடர்பான பிரச்சினைகள் அவர்களின் மன அமைதியை சீர்குலைக்கும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும், இது அவர்களின் சேமிப்பை பதம் பார்க்கும்.

தேவையற்ற கவலைகள் பல வழிகளில் உங்களைத் தொந்தரவு செய்யும்.

Advertisement

இந்த காலகட்டம் அவர்கள் வாழ்க்கையில் அதிக சவால்களுக்கு வழிவகுக்கும். எனவே அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்படும் பிரச்சினைகள் அவர்களை தனிமையுடன் போராட வைக்கும். நிதிரீதியாக மிகவும் சோர்வடைந்த சூழ்நிலை அவர்களுக்கு காத்திருக்கிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன