Connect with us

இந்தியா

H-1B விசா கட்டண உயர்வு: பணியமர்த்தலை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்; சிக்கலில் 10,000 பேரின் வேலை

Published

on

h1b visa

Loading

H-1B விசா கட்டண உயர்வு: பணியமர்த்தலை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்; சிக்கலில் 10,000 பேரின் வேலை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில்  H-1B விசா விண்ணப்பங்களுக்கான கட்டணம் 100,000 டாலர் ஆக உயர்த்தப்பட்டதன் விளைவாக, பெரிய மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான இன்டியூடிவ் (Intuitive), அதன் ஊழியர்களுக்கு H-1B விசா ஆதரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. சிலிக்கான் வேலியைச் சேர்ந்த முன்னணி மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான இன்டியூடிவ் (Intuitive), அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதிதாக விதித்துள்ள 100,000  டாலர் H-1B விசா விண்ணப்பக் கட்டணத்தின் தாக்கமாக, புதிய H-1B விசா ஸ்பான்சர்ஷிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.உலகளாவிய தொழில்நுட்பத்திலும் ரோபோடிக் அறுவை சிகிச்சையின் (robotic-assisted surgery) முன்னோடியாகவும் விளங்கும் இன்டியூடிவ் (Intuitive), இந்த விசா கொள்கை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள “சீரற்ற தன்மை” காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளது. கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், 100-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புப் பட்டியல்களில், “சமீபத்திய அமெரிக்க நிர்வாக அறிவிப்பால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, H-1B விசா ஸ்பான்சர்ஷிப் தேவைப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை நாங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்புதிய கட்டணத்தின் தாக்கம் மற்றும் நிறுவனத்தின் நிலைப்பாடுகடந்த ஆண்டு 8 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய, 150 டாலர் பில்லியனுக்கும் அதிகமான சந்தை மதிப்பை கொண்ட இன்டியூடிவ் (Intuitive), 1995-ல் தொடங்கப்பட்டது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) இணையதளத்தின்படி, இந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டு முதல் 1,500-க்கும் மேற்பட்ட H-1B மனுக்களுக்கு ஆதரவு அளித்துள்ளது. இப்போது, புதிய நிர்வாக உத்தரவுக்குப் பிறகு, சில நாட்களிலேயே இந்த விசா நிறுத்த முடிவை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த H-1B விசா, “சிறப்புப் பணிகளுக்காக” திறமையான வெளிநாட்டுத் திறமையாளர்களை அமெரிக்காவுக்குள் கொண்டு வர உதவுகிறது. நீண்ட காலமாகவே, இந்த விசா பிரிவில் இந்திய நாட்டவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு, H-1B விசா பெற்றவர்களில் 70%-க்கும் அதிகமானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.புதிய நிர்வாக உத்தரவு, ஒரு விண்ணப்பத்திற்கான கட்டணத்தை முன்பு இருந்த 2,000 டாலர் முதல் 5,000 டாலர் என்ற வரம்பில் இருந்து 100,000 டாலராக உயர்த்தியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் கட்டண உயர்வைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.இதன் விளைவாக, அமேசான், மைக்ரோசாஃப்ட் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மற்றும் வங்கிகள், தங்கள் ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தும் அவசர குறிப்புகளை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சமூக ஊடகங்கள் வழியாக இந்த குழப்பம் தீவிரமடைந்த பிறகு, வெள்ளை மாளிகையின் “ரேபிட் ரெஸ்பான்ஸ்” (Rapid Response) கணக்கு ட்விட்டரில் (X) ஒரு தெளிவுபடுத்தலை வெளியிட்டது.வெள்ளை மாளிகையின் விளக்கம்:”இந்த அறிவிப்பு, தற்போது விசா வைத்திருப்பவர்கள் யாருக்கும் பொருந்தாது.””இந்த அறிவிப்பு 2025 குலுக்கல் சுழற்சியில் பங்கேற்ற பெறுநர்களைப் பாதிக்காது.””இந்த அறிவிப்பு, தற்போது விசா வைத்திருப்பவர் அமெரிக்காவிற்கு வருவது/செல்வது ஆகிய திறனைப் பாதிக்காது.”இந்த தெளிவுபடுத்தல் வெளியான போதிலும், H-1B விசா பயன்பாடு குறித்து தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதையே Intuitive-ன் முடிவு காட்டுகிறது. தற்போதுள்ள விசா வைத்திருப்பவர்களுக்குப் பாதிப்பு இல்லை என்றாலும், எதிர்காலத்தில் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதற்கான செலவு மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவை அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன