வணிகம்
‘H-1B பணியாளர்களை ஒரு வருடத்திற்குள் மாற்றுங்கள்’: ஊழியர்களை நீக்கும் ‘டிரான்சிஷன்’ உத்தரவு!
‘H-1B பணியாளர்களை ஒரு வருடத்திற்குள் மாற்றுங்கள்’: ஊழியர்களை நீக்கும் ‘டிரான்சிஷன்’ உத்தரவு!
அமெரிக்காவின் H-1B விசா முறையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், குறிப்பாக விண்ணப்பக் கட்டணம் $100,000-ஆக (இந்திய மதிப்பில் சுமார் 83 இலட்சம் ரூபாய்) உயர்த்தப்பட்டது, சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு புதிய விண்ணப்பதாரர்கள், ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்கள் மற்றும் புலம்பெயர் பணியாளர்களை நம்பியுள்ள நாடுகள் என அனைவருக்கும் இடிபோல் விழுந்துள்ளது.இந்த விதிமுறையின் இருண்ட பக்கம் என்ன என்பதை, வால் ஸ்ட்ரீட்டின் ஒரு முன்னணி வங்கியின் நிர்வாக இயக்குநர் (Managing Director) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு மூலம் வெளிப்படுத்தியுள்ளார். புதிய விதியின் தாக்கம், நிறுவனங்களின் நிதி நிலை மற்றும் பணியாளர்களை நிர்வகிக்கும் முறையில் என்னென்ன சவால்களை உருவாக்கியுள்ளது என்பதை அவர் விளக்கியுள்ளார்.திடீர் உத்தரவு: “H-1B ஊழியர்களை படிப்படியாக வெளியேற்றுங்கள்!”நிர்வாக இயக்குநர் பகிர்ந்த தகவலின்படி, தங்களது நிறுவனத்தின் மனிதவளக் குழுக்களுக்கு இந்த வார தொடக்கத்தில் ஓர் உத்தரவு சென்றுள்ளது. அது, H-1B விசா ஊழியர்களை ஒரு வருடத்திற்குள் படிப்படியாக நிறுவனத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் (Phase Out) என்பதாகும்.இந்த அரசாணையில் ‘வேலையை விட்டு நீக்குங்கள்’ என்று நேரடியாகக் குறிப்பிடப்படாவிட்டாலும், இந்தப் பணியிடங்களுக்கு மாற்றாக மற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று தலைவர்களுக்கு வலுவான அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், நிறுவனத்தின் அனைத்துத் துறைகளும் அவசர அவசரமாக மாற்றத்திற்கான திட்டங்களை (Transition Plans) வகுக்கத் தொடங்கியுள்ளன.“எனது துறையில் மூன்று H-1B ஊழியர்கள் உள்ளனர், அவர்களை நானே படிப்படியாக வெளியேற்றப் போகிறேன். புதிய விசா தேவைகள், எங்கள் பிப்ரவரி மாத போனஸ் பட்ஜெட்டை மிகவும் பாதிக்கிறது,” என்று அந்த நிர்வாக இயக்குநர் தனது பதிவில் வெளிப்படையாக எழுதியுள்ளார்.இந்த புதிய $100K விதியால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை (Ambiguity) தான், உயர் திறன்பெற்ற வெளிநாட்டுப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து பெரிய நிறுவனங்களைத் தடுமாறச் செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பட்ஜெட் சிக்கல் மற்றும் மாற்றுத் தேடல்கள்H-1B கட்டண உயர்வு, குழுக்களின் மொத்த பட்ஜெட்டிலும் குழப்பங்களை ஏற்படுத்துகிறது, குறிப்பாக ஊழியர்களுக்கான போனஸ் நிதி ஒதுக்கீட்டை (Bonus Allocation) கடுமையாகப் பாதிக்கிறது. அதிக விசா கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பதால், மற்ற செலவினங்களுக்கான நிதி குறைக்கப்படுகிறது.இதனால், பல நிறுவனங்களும் இப்போதே மாற்று வழிகளைத் தேடத் தொடங்கிவிட்டன. அந்த நிர்வாக இயக்குநர் கூட, H-1B ஊழியர்களுக்குப் பதிலாக மெக்சிகோவில் உள்ள அதிகத் திறமைவாய்ந்த பணியாளர்களை நியமிக்கக் கருதி வருவதாகக் கூறியுள்ளார். நியூயார்க் சிட்டியில் வாய்ப்பு தேடும் பல திறமைசாலிகள் அங்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.இணையவாசிகள் கோபம்: இந்த நிர்வாக இயக்குநரின் பதிவுக்குக் கீழேயுள்ள கருத்துகள், விசா முறை மாற்றத்தின் மீதுள்ள கோபத்தையும், கவலையையும் பிரதிபலிக்கின்றன.திறமைக்கான ஆபத்து: ஒரு பயனர், “அந்த மூன்று H-1B ஊழியர்கள்தான் அங்கே மொத்த வேலையையும் இழுத்துக்கொண்டிருக்கலாம். திறமை வெளியேறினால், சீக்கிரமே இந்தக் கம்பெனி காணாமல் போகும். ஒரு பெரிய போட்டியாளர் அந்தத் திறமைகளை அள்ளிக்கொண்டு போவார். மேலும், அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சி பல தசாப்தங்களாக உலகத் திறமைகளைச் சார்ந்துதான் இயங்குகிறது” என்று எச்சரித்துள்ளார்.தவறான நோக்கம்: மற்றொரு பயனர், H-1B விசா விதிவிலக்கான தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், நிறுவனங்களின் செலவு குறைப்புக்கான கருவியாக அது பயன்படுத்தப்படக் கூடாது என்றும் வாதிட்டார். சாதாரண மென்பொருள் வேலைகளுக்குப் பதிலாக, தொழில்துறையை மாற்றியமைக்கும் தொலைநோக்கு சிந்தனையாளர்கள், தொழில்நுட்ப மேதைகள் போன்றவர்களுக்கே விசா ஒதுக்கப்பட வேண்டும் என்பது அவரது கருத்து.இந்த $100,000 விதியானது, ஒருபுறம் நிறுவனங்களின் செலவு மற்றும் பட்ஜெட் நிர்வாகத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி, தற்போதுள்ள H-1B ஊழியர்களுக்கு நிச்சயமற்ற எதிர்காலத்தை உருவாக்கியுள்ளது. மறுபுறம், வெளிநாட்டுத் திறமைகளை மட்டுமே நம்பியிருக்கும் அமெரிக்கத் தொழில் துறையின் முதுகெலும்பு இதனால் முறியும் என்ற அச்சத்தையும் இந்த விவாதம் எழுப்பியுள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
