Connect with us

பொழுதுபோக்கு

ஒரே நேரத்தில் மாமனார் – மருமகனுடன் நடித்தவர்; தமிழில் விஜய்க்கு ஜோடி, கடைசி படத்தில் சிம்புவுடன் நடித்த இவர் யார்?

Published

on

shreya saran

Loading

ஒரே நேரத்தில் மாமனார் – மருமகனுடன் நடித்தவர்; தமிழில் விஜய்க்கு ஜோடி, கடைசி படத்தில் சிம்புவுடன் நடித்த இவர் யார்?

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமான ஒரு நடிகை, ஒரே நேரத்தில் மாமனார் மருமகன் இருவருடனும் இணைந்து நடித்துள்ளார். தனது கடைசி தமிழ் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர், தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார், இந்த நடிகை யார் தெரியுமா?தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகை ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இந்த நடிகை வேறு யாரும் இல்லை ஸ்ரேயா சரண் தான். 2003-ம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து 2005-ம் ஆண்டு மழை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கினார்.அதனைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் தனுஷூடன் இணைந்த ஸ்ரேயா, அடுத்த வருடமே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி தி பாஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், அடுத்து விஜய்க்கு ஜோடியாக அழகிய தமிழ் மகன், விஷாலுடன் தோரணை, விக்ரமுடன் கந்தசாமி, தனுஷூடன் குட்டி, சரத்குமாருடன் ஜக்குபாய் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம், அன்பானவன் அசராதவன், அடங்காதவன். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். அதன்பிறகு தமிழில் நடிக்காத இவர், இந்த ஆண்டு வெளியான சூர்யாவின் ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.தெலுங்கில் தொடர்ந்து நடித்து வரும் ஸ்ரோயா, சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார், அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணமாகி ஒரு குழந்தைக்கு அம்மாவான ஸ்ரோயா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த பதிவுகள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன