இலங்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோலாகலக் கொண்டாட்டம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோலாகலக் கொண்டாட்டம்
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளால், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மிகுந்த ஆடம்பர விழாவாகவும், செப்டம்பர் 27 ஆம் திகதி காலை உலக சுற்றுலா தினம், கொண்டாடப்பட்டது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் திருமதி அனுஷா தமயந்தி, நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது, நாட்டுக்கு வருகைத்தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அன்புடன் வரவேற்கப்பட்டு, கேக் மற்றும் தேயிலை அடங்கிய பொதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
அதேநேரம், மலையக மற்றும் நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் குழுவும், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்காக நடனங்களை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர், இதுவரை 1.67 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 27 ஆம் திகதி மதியம் 12:00 மணி வரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
