சினிமா
கரூர் ருத்ரதாண்டவம்; கர்ப்பிணிகளும் பலியான சோகம்.! உயிர் இழந்தவர்களின் மொத்த விபரம்
கரூர் ருத்ரதாண்டவம்; கர்ப்பிணிகளும் பலியான சோகம்.! உயிர் இழந்தவர்களின் மொத்த விபரம்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இன்னும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தனி விமானத்தில் நள்ளிரவில் கரூருக்கு சென்று, அங்கு உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் நிவாரணமும் வழங்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த சம்பவம் பற்றி விசாரிக்க தனி விசாரணை குழு அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 39 பேரில் 2 கர்ப்பிணி பெண்கள் அடங்குவதாகஅதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிறுவர்கள், குழந்தைகள் இதில் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் தற்போது இந்த செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதில் 34 பேரின் விவரங்கள்வெளியாகி உள்ளன. அந்தப் பட்டியல் இதோ.., ஈரோடு மாவட்டம்:- சதீஷ் குமார் த/பெ துரைசாமி – ஆவுடையார்பாளையம், காந்தி நகர், கொடுமுடி- ரேவதி க/பெ முருகேசன் – கொடுமுடி வட்டம்திருப்பூர் மாவட்டம்:- மணிகண்டன் த/பெ பாலாஜி – தீர்த்தம்பாளையம், வெள்ளக்கோயில், காங்கேயம்- கோகுலபிரியா க/பெ ஜெயபிரகாஷ் – செம்மாண்டபாளையம், வெள்ளக்கோவில், காங்கேயம்.திண்டுக்கல் மாவட்டம்:- சங்கர் கணேஷ் த/பெ பால்ராஜ் – வடக்கு தாளிபட்டி, குஜிலியம்பாறை- பாத்திபாபானு க/பெ பிரபாகரன் – கொள்ளப்பட்டி, ஒட்டன்சத்திரம்சேலம் மாவட்டம்:- ஆனந்த் த/பெ முருகன் – அரூர் மெயின் ரோடு, சுக்காம்பட்டி.கரூர் மாவட்டம்:- தாமரைக்கண்ணன் த/பெ முருகேசன் – ஒத்தப்பட்டி காலனி, பாகநத்தம்- ஹேமலதா க/பெ ஆனந்த்ஜோதி – விஸ்வநாதபுரி- சாய்லெட்சனா த/பெ ஆனந்த்ஜோதி – விஸ்வநாதபுரி- சாய்ஜீவா த/பெ ஆனந்த்ஜோதி – விஸ்வநாதபுரி- சுகன்யா க/பெ தேவேந்திரன் – வடிவேல் நகர், காவலர் காலனி- ஆகாஷ் த/பெ மாணிக்கம் – காமராஜ்புரம் வடக்கு- தனுஷ்குமார் த/பெ இளங்கோவன் – காந்தி நகர், காந்தி கிராமம்- வடிவழகன் (வடிவேல்) த/பெ முத்துசாமி – மேங்காட்டு தெரு, பசுபதிபாளையம்- குருவிஷ்னு த/பெ விமல் – வடிவேல் நகர், வேலுச்சாமிபுரம்- ரமேஷ் த/பெ பெருமாள் – கோடங்கிபட்டி- சனுஜ் த/பெ ரகு – காந்தி கிராமம், தாந்தோனி கிராமம்- ரவிகிருஷ்ணன் த/பெ மருதாசலம் – பாரதியார் தெரு, எல்.என்.எஸ் கிராமம்- பிரியதர்ஷினி த/பெ சக்திவேல் – ஏமூர் புத்தூர், ஏமூர் கிராமம்- தரணிகா த/பெ சக்திவேல் – ஏமூர் புத்தூர், ஏமூர் கிராமம்- பழனியம்மாள் த/பெ பெருமாள் – கே.இ.நகர், 2வது தெரு, வேலுச்சாமிபுரம்- கோகிலா த/பெ பெருமாள் – கே.எ.நகர், 2வது தெரு, வேலுச்சாமிபுரம்- மகேஷ்வரி க/பெ சக்திவேல் – 9இ லெட்சுமி நகர், அரசு காலனி, அருகம்பாளையம்- அஜிதா த/பெ மணி (புகழேந்தி) – தொக்குப்பட்டி புதூர், அரவக்குறிச்சி- மாலதி த/பெ கிருஷ்ணமூர்த்தி – பாரதியார் நகர், ராயனூர் வடக்கு- சுமதி க/பெ மணி (சுப்பிரமணி) – 80 அடி ரோடு, ரெத்தினம் சாலை- கிருத்திக் யாதவ் த/பெ சரவணன் – கருப்பாயி கோவில் தெரு- சந்திரா க/பெ செல்வராஜ் – ஏழூர் புதூர்- விஜயதாரணி க/பெ சக்திவேல் – தாழைப்பட்டி, பிச்சம்பட்டி- கிஷோர் த/பெ கணேஷ் – வடக்கு காந்தி கிராமம், அன்பு நகர்- ஜெயா க/பெ சுப்பிரமணி – ரெட்டிகடை தெரு, வெங்கமேடு- அருக்காணி க/பெ காளியப்பன் – ஏமூர் புத்தூர், ஏமூர் கிராமம்- ஜெயந்தி க/பெ சதீஷ்குமார் – மாரியம்மன் கோவில் தெரு, வேலாயுதம்பாளையம்
