Connect with us

பொழுதுபோக்கு

கலைஞர் டிவி ‘ஷோ’ எனக்கு உடன்பாடு இல்ல, படம் பாக்காம ப்ரமோஷன் பண்ண‌ மாட்டேன்: இன்ஸ்டா பிரபலம் சொன்னது எந்த படம்?

Published

on

shrava

Loading

கலைஞர் டிவி ‘ஷோ’ எனக்கு உடன்பாடு இல்ல, படம் பாக்காம ப்ரமோஷன் பண்ண‌ மாட்டேன்: இன்ஸ்டா பிரபலம் சொன்னது எந்த படம்?

இன்றைய காலக்கட்டத்தில் வெள்ளித் திரையின் மூலம் பிரபலமானவர்களை விட இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர்கள் தான் அதிகம். ரீல்ஸ் செய்வது, கண்டென் வீடியோ செய்வது என பலரும் பல வழிகளில் பிரபலமாகி வருகின்றனர். சிலர் புரொமோஷன் மூலம் பிரபலமாகி வருகின்றனர்.அதாவது, ஒரு குறிப்பிட்ட பொருளை புரொமோஷன் செய்வதன் மூலம் அந்த கம்பெனியில் இருந்து அவர்களுக்கு பணம் வழங்கப்படும். இப்படி இன்ஸ்டா பிரபலங்கள் பலர் புரொமோஷன்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தனக்கு என்ன நடந்தாலும் காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்க போகும் வரை தான் என்ன செய்கின்றோம் என்று இன்ஸ்டாவில் ஸ்டோரி, போஸ்ட், ரீல்ஸ் என செய்து வருகின்றனர்.இதற்கு மில்லன் கணக்கில் வியூஸ்கள் குவிவதன் மூலம் பலர் பிரபலமாகின்றனர். சமீபத்தில் இன்ஸ்டா பிரபலமான ஷரவ்யா ‘பார்பி டால்’ போன்று தன்னை அலங்கரித்து கொண்டு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, இவர் பல பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இன்ஸ்டா பிரபலமான ஷரவ்யா, கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, கலைஞர் தொலைக்காட்சியில் ’வா தமிழா வா’ விவாத நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது. ஒரு பக்கம் சோசியல் மீடியா பிரபலங்கள் மற்றொரு பக்கம் சோசியல் மீடியா தவறான பிரபலங்களை உருவாக்குகிறது என்ற தலைப்பில்  விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இரு புறமும் பல கருத்துகளை எடுத்துரைத்தார்கள். ஆனால், அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சோஷியல் மீடியா பிரபலங்கள் என்றால் இப்படிதான் என குறை சொல்வது போலவே தோன்றியது. தனிப்படட் முறையில் நான் நிறைய குரல் கொடுத்திருக்கிறேன். இது எல்லாம் தெரியாமல் எதுவும் செய்யமாட்டார்கள் என்று சொல்லும் பொழுது நான் கோவப்பட்டு பேசினேன். நான் ஒரு படத்தை நேரில் சென்று  பார்க்காமல் ரிவ்யூ, வீடியோ போன்றவற்றை வெளியிடமாட்டேன். ஒரு விஷயத்தை பார்த்து பிடித்திருந்தால் மட்டும் தான் வீடியோ போடுவேன்.  ஒரு சிலர் எதுவும் யோசிக்காமல் செய்யும் பல காரியங்களால் எல்லோருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது” என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன