விளையாட்டு
IND vs PAK Final LIVE Score: சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்
IND vs PAK Final LIVE Score: சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 9 ஆம் தேதி முதல் பரபரப்பாக நடைபெற்று வந்த 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றன. லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் 4 சுற்றில் இந்த அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதின. இந்த சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. அதன்படி, சூப்பர் 4 சுற்றில் ஆடிய 3 போட்டிகளிலும் வென்ற இந்தியா மற்றும் 3 போட்டிகளில் ஆடி 2-ல் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) இரவு 8 மணிக்கு துபாயில் அரங்கேறுகிறது.
