இலங்கை
கேபிள் கார் விபத்து; மேலும் ஒருவர் சாவு!
கேபிள் கார் விபத்து; மேலும் ஒருவர் சாவு!
குருநாகலிலுள்ள பௌத்த வன ஆச்சிரமத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பிக்குவும் நேற்று உயிரிழந்துள்ளார். இவர் குருநாகல் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்தபோதே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் ஏற்கனவே 7 பிக்குகள் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எட்டாக உயர்ந்துள்ளது. மேலும் ஐந்து பிக்குகள் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர் .
