இலங்கை
ஜப்பானிய பிரதமரை இன்று சந்திக்கும் ஜனாதிபதி அநுர!
ஜப்பானிய பிரதமரை இன்று சந்திக்கும் ஜனாதிபதி அநுர!
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (29) ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்க உள்ளார்.
ஜப்பானில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் கலந்துரையாடல்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், முதலீடு, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும்.
இதன்போது, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேராத், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான தலைமை ஜனாதிபதி ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய, மூத்த ஜனாதிபதி பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலுகமுவ மற்றும் வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரிகள் குழு இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளமையும் குரிப்பிடத்தக்கது.
