இலங்கை
திடீர் சுகவீனமுற்ற பெண் உயிரிழப்பு!
திடீர் சுகவீனமுற்ற பெண் உயிரிழப்பு!
திடீர் சுகவீனமுற்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கொட்டடியைச் சேர்ந்த தி. பிறேம நளினி (வயது-46) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச்சென்ற போது அவர் திடீரென சுகவீன முற்றுள்ளார். அதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மயக்கமடைந்துள்ளார். மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.
