இலங்கை
தோட்டத்துக்கு சென்றவர் சடலமாக மீட்பு!
தோட்டத்துக்கு சென்றவர் சடலமாக மீட்பு!
தோட்டத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் சடலமாக மீட்கப்ட்டுள்ளார். யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த சி.ராஜபாரதி (வயது-60) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்றுமுன்தினம் தோட்டத்துக்குச் செல்வதாகக் கூறிச்சென்றவர் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் அவரைத் தேடிச்சென்றுள்ளனர். அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.
