இலங்கை
மக்கள் மீது மன்னாரில் தாக்குதல்; கட்டைக்காட்டில் கண்டனப்போர்!
மக்கள் மீது மன்னாரில் தாக்குதல்; கட்டைக்காட்டில் கண்டனப்போர்!
மன்னார் காற்றாலைத் திட்டத்துக்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும், பங்குத்தந்தையர் மீதும் பொலிஸார் நடத்திய தாக்கு தலைக்கண்டித்து வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட் டில் நேற்று அமைதிவழிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கட்டைக்காடு பொதுமக்களின் ஒழுங்குபடுத்தலில் கட்டைக்காடு பங்குத்தந்தை தலைமையில் நேற்றுக்காலை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “அழிக்காதே அழிக்காதே மன்னாரை அழிக்காதே”, “வேண்டாம் வேண்டாம் காற்றாலைத் திட்டம் வேண்டாம்”, “அள்ளாதே அள்ளாதே எமது மண்ணை அள்ளாதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு. கோசங்களை எழுப்பினர்.
மன்னார் தீவில் எமது மக்களுடைய சாத்வீகப் போராட்டம் அரசு இயந்திரத்தால் ஒடுக்கப்படுவதை கட்டைக்காடு பொதுமக்களாக நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அரச இயந்திரம் மதச்சாயம் பூசி மக்களின் சாத்வீகப் போராட்டத்துக்கு சேறு பூசமுனையாமல் அவர்களுடைய இறைமையைப் பாதுகாப்பதற்குக் கொடுத்த வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று கட்டைக்காடு பங்குதந்தை வசந்தன் அடிகளார் வலியுறுத்தினார்.
